இஸ்லாமிக் நியுஸ்

இஸ்லாமிக் நியுஸ் இணையதளத்தில் சமிப காலமாக பதிவைடுவதில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம் இன்ஷா அல்லாஹ் விரைவில் புதிய மாற்றங்களுடன் இந்த இணையதளம் சிறகடிக்கும்…

திருச்சி மாவட்ட தமுமுக நிர்வாகிகள்

தமுமுக மாவட்ட நிர்வாகிகள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் அண்மையில் தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் மாவட்டத் தலைவர் ஏ. அப்துல் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் எம். அப்துர் ரஹிம், பொருளாளர் எம். பைஸ் அகமது, மாவட்டத் துணைச் செயலர் ஏ. அப்துல் சமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள்:

மாவட்டத் துணைச் செயலர்கள் – திருவெறும்பூர் பி. சாதிக்பாஷா, எஸ். முகமது ஷகீல், மாவட்ட தொண்டரணிச் செயலர் – எஸ். முகமது சித்திக், மாவட்ட வர்த்தக அணி – எல். நாசர், சுற்றுப்புறச் சூழல் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு அணி – எம். பாவா பக்ருதீன், மாவட்டத் தொழிலாளர் அணி – இ. அப்துல் சமது, மாவட்ட உலமாக்கள் அணிச் செயலர் – ஏ. செய்யது அபுதாகீர் மிலாஹிரி.

பாலக்கரை – மதுரை சாலையில் இயங்கி வரும் மதரஸô – யே – முகம்மதியா நடுநிலைப் பள்ளி அருகே வேகத்தடை அமைக்க பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விரைவில் இதற்கான நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் எடுக்க வேண்டும்.

வேகத்தடை அமைக்க தாமதம் ஆகும் பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என்ற தீர்மானமும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

அரசியல் களமாகும் வேலூர் கோட்டை மசூதி

அரசியல் களமாகும் வேலூர் கோட்டை மசூதி

வேலூர், மார்ச் 4: வேலூர் கோட்டை மசூதியில் தடையை மீறி தொழுகை நடத்துவோம் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அறிவித்ததைக் கண்டு சில முஸ்லிம் அமைப்புகளே கவலை தெரிவித்துள்ளன.

வேலூர் கோட்டையின் பராமரிப்புப் பணியை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை 1921-ல் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. கோட்டைக்குள் இருந்த ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில், மசூதி ஆகியவற்றில் அப்போது வழிபாடு நடைபெறவில்லை. ஆனால் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் மட்டும் வழிபாடு தொடர்ந்து நடந்து வந்தது.

இந்நிலையில் ஜலகண்டேஸ்வரர் கோயிலை மக்கள் வழிபாட்டுக்கு திறந்துவிட பல்வேறு போராட்டத்தை வேலூர் மக்கள் நடத்தி வந்தனர். ஒருகட்டத்தில் இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலைக்கு மக்களின் போராட்டம் தீவிரமடைந்தது. அப்போதைய மாவட்ட ஆட்சியர் கங்கப்பா இதற்கு சுமுக தீர்வுகாண நடவடிக்கை மேற்கொண்டார்.

இதன் அடிப்படையில் 1981-ம் ஆண்டு கோயிலை வழிபாட்டுக்கு திறந்துவிட முடிவு செய்ததைத் தொடர்ந்து, கோட்டை வளாகத்திலேயே 1750-ம் ஆண்டில் கட்டப்பட்ட மசூதியையும் வழிபாட்டுக்கு திறந்து விடலாம் என்ற முடிவில் முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார் ஆட்சியர்.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஏ.கே. அப்துல் சமது, ஆடிட்டர் ஷெரீப் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள், அருகிலேயே ஹிந்து கோயில் உள்ளதால், மசூதியில் 5 வேளை தொழுகை நடத்தும்போது தேவையில்லாத பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே மசூதியில் வழிபாடு வேண்டாம் என்று கையொப்பமிட்டு கொடுத்துள்ளனர்.

எனவே 1981 மார்ச் 16-ம் தேதி சத்துவாச்சாரியில் இருந்த சிவலிங்கத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதிட்சை செய்து வழிபடத் தொடங்கினர்.

மசூதியை இஸ்லாமியர்களின் தொழுகைக்கு திறந்துவிட வேண்டும் என்று முதலில் கோரிக்கை விடுத்த திராவிட முஸ்லிம் முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் இக்பால் இதுகுறித்து கூறியதாவது:

எங்கள் அமைப்பின் சார்பில் கோரிக்கை விடுத்தபோது, அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த சிவக்குமார், மசூதி தொடர்பான ஆவணங்களைக் காட்டி, இங்கு தொழுகை வேண்டாம் என்று முஸ்லிம் பெரியவர்களே எழுதிக் கொடுத்த கடிதத்தைப் பார்த்தவுடன், காரணம் இல்லாமல் பெரியவர்கள் செய்திருக்கமாட்டார்கள் என்று அந்த கோரிக்கையை வலியுறுத்துவதை நிறுத்திவிட்டோம்.

தற்போது தடையை மீறி தொழுகை நடத்துவோம் என்று தெரிவித்துள்ள ஜவாஹிருல்லா தி.மு.க. கூட்டணியில் இருக்கிறார். அவர் நேரடியாக முதல்வரிடம் பேசி மசூதியை தொழுகைக்கு சுமுகமாக திறந்து விடட்டும். அல்லது தனது பதவியை ராஜிநாமா செய்யட்டும். அதைவிடுத்து பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது நல்லதல்ல என்றார்.

இவ்வளவு நாள்கள் அமைதியாக இருந்துவிட்டு, முஸ்லிம் பெரியவர்களே பிரச்னை கூடாது என்று முடிவு செய்துள்ள நிலையில் த.மு.மு.க. இப்பிரச்னையை கையிலெடுத்துள்ளது அனைவரிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே முன்னதாகவே இப்பிரச்னையில் சுமுகத் தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DND20080304232602&Title=Districts+Page&lTitle=U%F4YhPf+%F9Nn%A7Ls&Topic=0&dName=%FAY%DB%F4o&Dist=-17 

கீழக்கரையில் இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுõரியில் ரோட்ராக்ட் சங்கம், மதுரை அரவிந்த் கண் ஆஸ்பத்திரி இணைந்து இலவச கண் மருத் துவ முகாமை நடத்தியது. பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன் துவக்கி வைத்தார். பாலிடெக்னிக் தாளாளர் கபீர் சாகிபு முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை ரோட்ராக்ட் சங்க ஆலோசகர் பாலசுப்ரமணியன் செய்திருந்தார்.

http://www.dinamalar.com/2008MAR05/district/ramanathapuram.asp

ஷார்ஜாவில் அலிகர் முஸ்லிம் பல்கலை முன்னாள் மாணவர் சங்க கூட்டம்

ஷார்ஜாவில் அலிகர் முஸ்லிம் பல்கலை முன்னாள் மாணவர் சங்க கூட்டம்

ஷார்ஜாவில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்க கூட்டம் 06 மார்ச் வியாழன் மாலை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அமீரகத்துக்கான இந்திய தூதர் திருமிகு தல்மிஷ் அஹ்மது, கன்சல் ஜெனரல் திருமிகு வேணு ராஜாமணி, கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். மேலும் விபரங்களுக்கு ஆமிர் 050 76 86 755 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.