அறிமுக விழா
துபாயில் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அமீரகக் கிளை அறிமுக விழா 07.05.2010 வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு அல் கிஸைஸ் மகளிர் உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற இருக்கிறது.
விழாவிற்கு கொழும்பு தமிழ்ச் சங்க துணைத்தலைவர் டாக்டர் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் முன்னிலை வகிக்கிறார். நாகூர் ஹனிபா அவர்களால் பாடப்பட்ட பெரும்பான்மையான பாடல்களை இயற்றிய கவிஞர் நாகூர் சலீம் வாழ்த்துரை வழங்குகிறார்.
பெரியார் தாசன் என்று அறியப்பட்ட முனைவர் அப்துல்லா சிறப்புரை நிகழ்த்துகிறார். மேலும் இஸ்லாமியப் பாடல்கள், புத்தகம் மற்றும் மின்னூல் வெளியிடப்பட இருக்கின்றது.
துபாய் தேரா கோல்டு சூக் அருகிலிருந்து மாலை 4.30 மணிக்கு அரங்கிற்கு இலவச பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
Advertisement


