வாழ்வா? தாழ்வா போராட்டத்தில் இந்திய அணி படு தோல்வி

Posted on 032343pm. Filed under: இந்தியா, ஈழம் - இலங்கை, கிரிக்கெட் |

போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெறும் உலகக்கோப்பை ‘பி’ பிரிவுப் போட்டியில், 255 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

துவக்க வீரர்கள் கங்குலி 7 ரன்னுக்கும், உத்தப்பா 18 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். இருவரின் விக்கெட்டையும் சமிந்தா வாஸ் கைப்பற்றினார். 27 பந்துகளைச் சந்தித்து 18 ரன்கள் எடுத்திருந்த உத்தப்பா, வாஸ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ரன் எண்ணிக்கை 25ஆக இருந்தது.

ஓரளவு தாக்குப் பிடித்த வீரேந்திர ஷேவாக், 46 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து முரளீதரன் பந்துக்கு இரையானார். பொறுப்பின்றி விளையாடிய டெண்டுல்கரும், தோனியும் ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 6 ரன்கள் எடுத்த நிலையில் யுவராஜ் சிங் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய துவக்க வீரர் உபுல் தரங்கா 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தில்ஷான்- சில்வா ஜோடி இந்திய பந்து வீச்சை திறமையாக சமாளித்து ரன் குவித்தது. எனினும், 38 ரன்கள் எடுத்த நிலையில் படேல் பந்தில் தில்ஷான் ஆட்டமிழந்தார். 59 ரன்கள் குவித்த சில்வாவின் விக்கெட்டை டெண்டுல்கர் கைப்பற்றினார். வாஸ் மற்றும் அர்னால்டு ஆகியோர் தலா 19 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்தியத் தரப்பில் ஜாஹிர்கான் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அகர்கர், முன்னாப் படேல், டெண்டுல்கர், கங்குலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இலங்கை
* 50 runs in 11 overs
* 100 runs in 25.1 overs
* 150 runs in 35.1 overs
* 200 runs in 43.5 overs
* 250 runs in 49.4 overs

இந்தியா
* 50 runs in 12.4 overs
* 100 runs in 23.1 overs
* 150 runs in 36.4 overs

Make a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

    About

    இஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.

    RSS

    Subscribe Via RSS

    • Subscribe with Bloglines
    • Add your feed to Newsburst from CNET News.com
    • Subscribe in Google Reader
    • Add to My Yahoo!
    • Subscribe in NewsGator Online
    • The latest comments to all posts in RSS

    Meta

Liked it here?
Why not try sites on the blogroll...

%d bloggers like this: