அயோத்தியாகும் அதிராம்பட்டினம்.

Posted on 053108pm. Filed under: சட்டம் - நீதி |

அதிராம்பட்டினம் மேலத்தெரு அருகே உள்ள முனீசுவரன் கோவில். மக்களின் காக்கும் தெய்வமாய் இரவு-பகலாய் முழித்திருக்கும் கடவுளாய் முனீசுவரன் கடவுளாய் வணங்கப்பட்டு வருகிறார். இங்கு வருடந்தோறும் சங்கமிக்கும் மக்கள் கூட்டம் கிடா வெட்டி, கோழி அறுத்து படையல் பண்ணி விழாவை கொண்டாடுவது வழக்கம். அனைத்து சமூகத்தினரும் இணைந்து கொண்டாடும் முனீசுவரன் கோவில் திருவிழாவை நடத்துவதில் கடந்த சில வருடங்களாக இரு பிரிவினருக்கு இடையே கருத்து வேறுபாடு பிரச்சினை ஏற்பட்டது. முனீசுவரன் கோவில் திருவிழாவை காணாமல் பல ஆண்டுகளாக பாழ்பட்டு கிடக்கிறது. தூசி படர்ந்து கிடக்கும் கோவிலை அழகு படுத்தி, வர்ணம் தீட்டி மீண்டும் விழா நடத்த ஒரு பிரிவினர் முயற்சித்து வந்தனர். ஆனால் கோர்ட்டில் தடை இருப்பதால் அதற்கு முடியாமல் போனது. எனவே மூடி கிடக்கும் முனீசுவரன் கோவிலை திறந்து பிரமாண்டமாக விழா நடத்த முயன்றும் முடியாமல் போகவே கிராம மக்கள் ஏமாற்றம்  அடைந்தனர்.நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் இங்கு யாரும் தடையை மீறி விழா நடத்த கூடாது என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது. இதனால் சாதாரண நாட்களிலேயே முனீசுவரன் கோவிலில் வழிபாடு, பூஜை நடத்த மக்கள் அஞ்சி செலவும் செய்வதில்லை. தொக்காலிகாடு முனீசு வரன் கோவில் கடந்த சில ஆண்டுகளாக எவ்வித வழிபாடு, பூஜையும் இல்லாமல் மூடி கிடப்பது ஆக்கிராம மக்களின் இன்னொரு பிரிவினரிடையே ஆதங்கத்தை ஏற்படுத்தியது. எனவே முனீசுவரனுக்கு கிடா வெட்டி கோழி அறுத்து பிரமாண்டமான விழா எடுக்க அவர்கள் முடிவு செய்தனர். ஆனால் தடை உத்தரவு இருந்து வருவதால் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டனர். அதிலும் சிலர் விழா நடத்தியே தீருவது என கங்கனம் கட்டி கொண்டு அதற்கான தீவிர ஏற்பாட்டில் ஈடுபட்டனர். ஏற்கனவே போலீசாரும் இங்கு எவ்வித விழாவோ, வழிபாடோ நடத்தக்கூடாது என்று 144 தடை உத்தரவு போட்டு உள்ளனர். இதையும் மீறி அங்கு வைகாசி திருவிழாவை நடத்துவது என முடிவு செய்த 100-க்கும் மேற்பட்டோர் முன்னாள் பட்டுக்கோட்டை ïனியன் தலைவரும் தே.மு.தி.க. பிரமுகருமான ஜெயபால் தலைமையில் முனீசுவரன் கோவில் முன்பு குவித்தனர். அவர்கள் அங்கு ஆட்டு கிடாக்களையும், கோழிகளையும் கூடவே படையல் போடுவதற்குரிய பழ வகைகள், அரிசி உள்பட பலவற்றையும் கொண்டு வந்தனர். இந்த கூட்டம் குறித்து இன்னொரு பிரிவினருக்கு விஷயம் தெரியவந்தது. உடனடியாக அவர்களும் திருவிழா நடத்தவிடவே கூடாது என கங்கணம் கட்டி கொண்டு களத்தில் இறங்கினர். இரு பிரிவினருக்கு இடையே ஏற்படும் மோதலால் போர்க்களம் உருவாகி விடும் சூழலில் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். உடனடியாக தஞ்சை மண்டல போலீஸ் சூப்பிரண்டு அனந்தகுமார் சோமானிக்கு தகவல்கள் பறந்தன. தகவல் அறிந்த அவர் போலீசாருக்கு உடனடியாக உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து போலீஸ் டி.எஸ்.பி.க்கள் மருதப்பன், விஜயன் மற்றும் ஏ.டி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ. கலைச்செல்வியும் அங்கு முகாமிட்டு உள்ளார். ஏராளமான போலீ சார் பாதுகாப்பில் ஈடுபட் டுள்ளதால் தொக்காலிகாடு கிராமம் முழுவதும் பதட்டத்தில் உறைந்து போய் உள்ளது

Make a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

    About

    இஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.

    RSS

    Subscribe Via RSS

    • Subscribe with Bloglines
    • Add your feed to Newsburst from CNET News.com
    • Subscribe in Google Reader
    • Add to My Yahoo!
    • Subscribe in NewsGator Online
    • The latest comments to all posts in RSS

    Meta

Liked it here?
Why not try sites on the blogroll...

%d bloggers like this: