விக்கிரமசிங்கபுரம் மாணவி ஜெசிமா சுலைஹா 2வது இடம்.

Posted on 060121am. Filed under: கல்வி |

 மாநில ரேங்க் பெற்று சாதனை!

தினமும் காலை 5 மணிக்கு எழுந்து படித்தாலே போதும், சாதனை படைக்கலாம் என்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநில அளவில் 2ம் இடத்தை பிடித்த வி.கே.புரம் அமலி மேல் நிலைப் பள்ளி மாணவி ஜெசிமா சுலைஹா தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில்
நெல்லை மாவட்டம், வி.கே.புரம் இருதயகுளம் அமலி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெசிமா சுலைஹா 489 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்த மாணவி ஜெசிமா சுலைஹா வின் தந்தை செய்யது சம்சுதீன் ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது தாய் ரேகா. வி.கே.புரத்தில் உள்ள புனித மரியன்னை மழலையர் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தங்கை சப்னம் ஷாஜிதா 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
மாநிலத்தில் 2ம் இடம் பெற்றது குறித்து மாணவி ஜெசிமா சுலைஹா கூறியதாவது: தமிழகத்தில் 2வது இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சாதனைக்கு அல்லஹ்வின் அருளும் என் தாய், சித்தப்பா, தாத்தா ஆகியோர் பெரிதும் உறுதுணையாக இருந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களின் ஊக்கமும், தான் எனது வெற்றிக்கு காரணம்.
இந்த சாதனைக்காக சிறப்பான முயற்சி எதுவும் எடுக்கவில்லை. வழக்கம் போல் தினமும் காலை 5 மணிக்கு எழுந்து தொலுகையை முடித்துவிட்டு படிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தேன். அதனால் தான் இறைவனின் அருளால் சாதனை படைக்க முடிந்தது. கடின உழைப்பு இருந்தால் சாதிக்கலாம். எதிர்காலத்தில் டாக்டராகி பொதுமக்களுக்கு சேவை செய்வதே எனது லட்சியம் என¢றார்.
தமிழகத்தில் 2ம் இடம் பிடித்து நெல்லை மாவட்டத்திறகு பெருமை ஈட்டித் தந்த மாணவியை கலெக்டர் பிரகாஷ் பாராட்டி பரிசு வழங்கினார்.
நெல்லை முதன் மைக் கல்வி சத்தியவதி, முதன் மைக் கல்வி அலுவலரின¢ நேர்முக உதவியாளர் அப்பன்னசாமி, பள்ளித் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை இஸ்லாமிக் நியூஸ் மனதார பாராட்டுகிறது. சிறந்த துறைகளை தேர்ந்தெடுத்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அதேசமயம், தேர்ச்சிபெறாமல் போன மற்ற மாணவ/மாணவிகள் தொடர்ந்து தங்கள் கல்வி கற்கவும் பெற்றோர்கள் தொடர்ந்து அவர்களுக்கு ஊக்கத்தை கொடுத்து கல்வி புகட்ட இஸ்லாமிக் நியூஸ் கேட்டுக்கொள்கிறது.

Make a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

    About

    இஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.

    RSS

    Subscribe Via RSS

    • Subscribe with Bloglines
    • Add your feed to Newsburst from CNET News.com
    • Subscribe in Google Reader
    • Add to My Yahoo!
    • Subscribe in NewsGator Online
    • The latest comments to all posts in RSS

    Meta

Liked it here?
Why not try sites on the blogroll...

%d bloggers like this: