மதானி விடுதலை… அல்ஹம்துலில்லாஹ்.

Posted on 080143am. Filed under: சட்டம் - நீதி, விடுதலை |

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறியுள்ள நீதிபதி உத்தராபதி அவரை விடுதலை செய்வது குறித்து இன்று பிற்பகல் உத்தரவு பிறப்பிப்பதாக கூறியுள்ளார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இன்று குற்றவாளிகள் யார் என்ற தீர்ப்பை நீதிபதி உத்தராபதி வழங்கினார். பிற்பகல் வரை மொத்தம் 99 பேர் மீது அவர் தீர்ப்பளித்தார்.

அதில் அப்துல் நாசர் மதானி மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி அறிவித்தார். 

அல் உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களில் கொலை முயற்சி, ஆயுதம் பதுக்கி விநிேயாகித்தது, கூட்டுச் சதி உள்ளிட்ட முக்கியக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி அறிவித்தார்.

பாஷா மீதான 6 குற்றச்சாட்டுக்களில் 2 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. 4 நிரூபிக்கப்படவில்ைல.

மதானி மீதான ஐந்து குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்ைல என்று நீதிபதி அறிவுத்தவுடன், அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என அவரது வக்கீல் அக்பர் அலி கோரினார்.

ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்றுதான் கூறினேன். விடுதலை செய்வதாக கூறவில்லை என்றார்.

இதையடுத்து நீதிபதியுடன் மதானியின் வக்கீல்கள் கடுமையாக வாதிட்டனர். அவர்கள் கூறுகையில், மதானி நிரபராதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட நிரபராதியை இத்தனை ஆண்டுகள் சிறையில் அடைத்தது ஏன், இப்போது உடனடியா அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் ஆவேசத்துடன் நீதிபதியிடம் கூறினர்ர்.

அப்படியானால் நீங்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்யுங்ள் என்று நீதிபதி கூறினார். இதை ஏற்க மறுத்த வக்கீல்கள், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பளித்த பின்னர் ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்றனர்.

இதையடுத்து இன்று பிற்பகல் இதுகுறித்து உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

மதானி மீது குற்றச்சாட்டு நிரூபணமாகவில்லை என அறிவிக்கப்பட்டவுடன் நீதிமன்றத்திற்கு வெளியே காத்திருந்த மதானியின் ஆதரவாளர்கள் உற்சாக குரல் எழுப்பினர்.

மதானி கடந்த 9 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக அரசுத் தரப்பில் மூன்று டைரிகள், கடிதங்கள், லெட்டர் பேடு, புத்தகம் ஆகியவற்றை முக்கிய ஆதாரங்களாக சமர்ப்பித்திருந்தனர்.

மேலும் கோவையில் காவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட பின்னர் மதக் கலவரம் ஏற்பட்ட நாளில், கேரளாவிலிருந்து சென்னையில் இருந்த அல் உம்மா தலைவர் பாஷாவிடம் பலமுறை மதானி தொலைபேசியில் பேசியதற்கான ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சமர்ப்பித்திருந்தது.

மதானியின் டைரியில், ஷா மற்றும் முகம்மது அன்சாரியின் தொலை பேசி எண்கள் இடம் பெற்றிருந்ததையும் ஆதாராமாக போலீஸ் தரப்பு காட்டியிருந்தது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதானி பலமுறை ஜாமீன் கோரி நீதிமன்றங்களை அணுகினார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்க அரசுத் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

கேரள அரசும் மதானியை விடுவிக்குமாறு தொடர்ந்து தமிழக அரசிடம் கோரி வந்தது. இந்த நிலையில் 9 ஆண்டு சிறை வாசத்திற்குப் பின்னர் மதானிக்கு விடுதலை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனுமதி மறுத்த ஜெ அரசு:

காலில் கேங்ரைன் ஏற்பட்டு அறுவை சிகிச்சை பெறுவதற்குக் கூட மதானிக்கு ஜெயலலிதா அரசு அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.

மதானியால் பதவி இழந்த முனீர் ஹோதா:

அவருக்கு உதவி செய்ய முயன்ற அப்போதைய உள்துறைச் செயலாளர் முனீர் ஹோதாவை பதவியை விட்டே நீக்கினார் ஜெயலலிதா.

ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் முனீர் ஹோதாவை தனது தனிச் செயலாளராக முதல்வர் கருணாநிதி நியமித்தார்.

கேரளாவில் கொண்டாட்டம்

முன்னதாக அப்துல் நாசர் மதானி விடுதலை செய்யப்பட்டதாக அறிவிப்பு வந்ததையடுத்து கேரள மாநிலம், பாலக்காட்டில் மதானியின் கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

Make a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

    About

    இஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.

    RSS

    Subscribe Via RSS

    • Subscribe with Bloglines
    • Add your feed to Newsburst from CNET News.com
    • Subscribe in Google Reader
    • Add to My Yahoo!
    • Subscribe in NewsGator Online
    • The latest comments to all posts in RSS

    Meta

Liked it here?
Why not try sites on the blogroll...

%d bloggers like this: