பள்ளிவாசல் பிரச்சனையில் அத்துமீறும் பஞ் தலைவர்

Posted on 0111456am. Filed under: அரசியல், காவிகள் |

14:11:2007 

 தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணம் பேரூந்து நிலையத்தில் தனியார் ஒருவர் அதிரை ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கத்திற்கு வக்ப் செய்யப்பட்ட நிலத்தில் “மஸ்ஜித் அல்அமீன்” என்ற பெயரில் பள்ளிவாசல் கட்டப்பட்டு தொழுகை நடந்து வருகிறது. 

 இந்தியாவிலேயே முதன்முறையாக குப்பை அள்ளும் வாகனங்களுக்கான செட்

பள்ளி வாயிலை மறைத்து கட்டப்பட்டுள்ளது.

இன்னும் ஓரிரு வருடங்களில் சேது நெடுஞ்சாலை வழியாக அதிரையை கடந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக பேருந்து நிலையம் வழியாக பள்ளிக்குள் வந்துசெல்ல அமைக்கப்பட்டிருந்த வாசலை அதிரை பேரூராட்சி துணைச் சேர்மன் இராம.குணசேகரனின் தூண்டுதலின் பேரிலும், சேர்மன் M.M.S வஹ்ஹாப்  அவர்களின் நல்லாசியுடன் பேரூராட்சி மன்ற அலுவலர், பள்ளிவாசல் கமிட்டியாளர்களுக்கு எதிராக பல்வேறு தொந்தரவுகளையும் செய்து வருகிறனர்.

1. பள்ளியின் பேரூந்து நிலைய வாசலில் குப்பை வண்டிகளை நிறுத்தியது.
2. சமரசப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள் மீது பொய்வழக்கு போட்டது.
3. பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்பைத் துண்டித்தது.
4. மழை நீரினால் அரிக்கப்பட்ட பள்ளி வளாகத்தில் மணல் அடித்த டிராக்டர் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தது.
5. உயர் நீதிமன்ற உத்தரவைக் கண்டு கொள்ளாமல், பள்ளிவாசல் கமிட்டியார்களை காவல்துறையினர் மூலம் அச்சுறுத்துவது….

என சங்பரிவாரச் சிந்தனையுடன் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் பேரூராட்சி அலுவலரின் அடாவடிகளைக் கேட்பதற்கு வக்கில்லாமல் நம்மால் தேர்ந்தெடுத்து, நமது குறைகளைத் தீர்க்க பேரூராட்சிக்கு அனுப்பி வைக்கப் பட்ட வார்டு மெம்பர்களும் பேசாமடந்தைகளாக இருப்பதுடன், சேர்மன், துணைச் சேர்மன்,அலுவலர் ஆகியோரின் அடிமைகளாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

உள்ளூரில் வசிக்கும் பெருந்தகைகளும் கணவான்களும், இவர்களைப் பகைத்துக் கொண்டால் நிம்மதியாக வாழ முடியாது?! என்ற அச்சத்தில் எல்லா அடக்குமுறைகளையும் கண்டும் காணாமல்,தாங்களுண்டு தங்கள் தேங்காய் தோப்புகளுண்டு என சுயநலமாக இருந்து வருகிறார்கள்.

எவர் வீடோதானே எரிகிறது, நமக்கென்ன என்று கண்டுகொள்ளாமல் இருந்தால் ஒருநாள் நமது வீடும் எரியும்போது அணைக்க யாரும் வர மாட்டார்கள். இறையில்லத்திற்கு இடையூறு செய்பவர்கள், நாளை நமது இல்லங்களுக்கும் இடையூறு செய்யத் தயங்கமாட்டார்கள்.

தோலுரித்த பாம்புகளாக அடுத்த பொதுத்தேர்தலுக்கு கும்பிட்டவாறு ஓட்டுக் கேட்டு வரும்போது, சுரணையற்ற சிலர் வழக்கம்போல் கொடி பிடிப்பார்கள். அதிரை மக்களே! இவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்!! அதிரை நலன் விரும்பும் மக்களே! நீங்கள் வசிக்கும் பகுதியுளுள்ள நமதூர் மக்களை ஒன்று திரட்டி, இந்த அராஜக அக்கிரமக்காரர்களைக் கண்டியுங்கள்.

அல்லாஹ்வின் இல்லத்தை இடிப்பேன் என்று இறுமாப்பாக யானைப் படையுடன் வந்த ஏமன் நாட்டு மன்னன் அப்ரஹாம், மென்று போடப்பட்ட வைக்கோலைப்போல் சின்னாபின்னமாகி சீரழிந்தான். இறையில்லத்திற்கு இடையூறு செய்பவர்கள், இன்ஷா அல்லாஹ் விரைவில் ஈருலகிலும் இழிவடைவார்கள் என்பதை நினைவூட்டுங்கள்!

அல்அமீன் பள்ளிவாசல் கட்டி முடிக்கப்படும்வரை தங்கள் ஆசாபாசங்களை தியாகம் செய்து அல்லாஹ்விற்காக ஒன்றுணைந்துள்ள கமிட்டி மற்றும் சங்கத்தினருக்காக துஆச் செய்யுங்கள். அகிலத்தைக் காக்கும் அல்லாஹ் தனது, அல்அமீன் இல்லத்தையும் நிச்சயம் காப்பான்! மனம் தளராதீர்கள் முஸ்லிம்களே! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்!

Make a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

One Response to “பள்ளிவாசல் பிரச்சனையில் அத்துமீறும் பஞ் தலைவர்”

RSS Feed for Islamic News Comments RSS Feed

பள்ளிவாசலுக்கு இடையுறா அதுவும் ஒரு துலுக்கன்னாலயா? சுபஹானல்லா………..


Where's The Comment Form?

    About

    இஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.

    RSS

    Subscribe Via RSS

    • Subscribe with Bloglines
    • Add your feed to Newsburst from CNET News.com
    • Subscribe in Google Reader
    • Add to My Yahoo!
    • Subscribe in NewsGator Online
    • The latest comments to all posts in RSS

    Meta

Liked it here?
Why not try sites on the blogroll...

%d bloggers like this: