த மு மு க இனி வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிடும்

Posted on 0111902am. Filed under: அரசியல், தமிழ்நாடு |

மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ்  பேட்டி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வரும் தேர்தல்களில் போட்டியிட உள்ளதாக கட்சியின் மாநில தலைவர் ஜவாருல்லா தெரிவித்தார்.

திருச்சி பாலக்கரை மதுரை ரோட்டில் த மு மு க மாவட்ட மற்றும் மாநகர அலுவலகத்தை திறந்துவைக்க வந்த அவர் அளித்த பேட்டி:

சட்டமன்ற தேர்தலின்போது அறிவித்தபடி சிறுபான்மையினருக்கு 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கிய தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்க இம்மாதம் 24ம் தேதில் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தவுள்ளோம். பல்வேறு முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தோரும், கிறிஸ்துவ பேராயர்கள், பாதிரியார்களும் பங்கேற்கின்றனர்.

குஜராத்தில் 2002ல் நடந்த கலவரத்திற்கு அம்மாநில முதல்வர் நரேந்திரமோடிதான் காரணம் என சம்பந்தப்பட்ட பலர் வாக்குமூலம் அளித்துள்ளனர். எனவே, நரேந்தரமோடி கைது செய்யப்பட வேண்டும். குஜராத்தில் ஓராண்டுக்கு ஜனாதிபதி ஆட்சி ஏற்படுத்த வேண்டும். மேற்கு வங்காளம் நந்திகிராமத்தில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அங்கு பெரும்பாலான முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களுக்காக போராடுவதாக கூறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடத்தும்போது இதுபோன்ற செயல்கள் நடப்பது ஏற்கத்தக்கது அல்ல. திருவாரூரில் பூண்டி கலைச்செல்வன் கொடூரமாகக் கொலைக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கண்டனம் தெரிவிக்கிறது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் மிகக்குறைவாக இருப்பதால் இதுவரை தேர்தலின்போது பல்வேறு கட்சிகளுக்கு ஆதரவு அளித்துவந்த தமுமுக இனிவரும் தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிடுவதென கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக விவாதித்து முடிவுசெய்வோம்.
இவ்வாறு ஜவாஹிருல்லாஹ் தெரிவித்தார்.

Make a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

One Response to “த மு மு க இனி வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிடும்”

RSS Feed for Islamic News Comments RSS Feed

குஜராத்தில் அப்பாவி இஸ்லாமியர்களின் இரத்ததைகுடித்த காட்டேரிகளுக்கு கர்நாடகத்தில் சரியான பாடம் புகட்டியது மதசார்பற்ற ஜனதா தளம்…
Great தேவெ கெளடா


Where's The Comment Form?

    About

    இஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.

    RSS

    Subscribe Via RSS

    • Subscribe with Bloglines
    • Add your feed to Newsburst from CNET News.com
    • Subscribe in Google Reader
    • Add to My Yahoo!
    • Subscribe in NewsGator Online
    • The latest comments to all posts in RSS

    Meta

Liked it here?
Why not try sites on the blogroll...

%d bloggers like this: