இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் கிடையாது !

Posted on 0112837pm. Filed under: காவிகள், சமூகம் |

ஆர் எஸ் எஸ் புது விளக்கம்

இந்தியாவில் பிறந்த எவரையும் சிறுபான்மையினராக கருத முடியாது என ஆர்எஸ்எஸ் தலைவர் கே.எஸ்.சுதர்சன் கூறினார். (நினைவில் கொள்க இந்த வகையராக்கள்தான்  இஸ்லாமியர்களை பாகிஸ்தானியர்கள் என்கின்றனர்) வெளிநாட்டிலிருந்து அகதிகளாக வந்தவர்களை மட்டுமே சிறுபான்மையினராக பார்க்க வேண்டும். இந்த வகையில் இந்தியாவில் பிறந்த முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை சிறுபான்மையினராக கருத முடியாது என்றார்

டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் அவர் பேசியதாவது
சிறுபான்மையினருக்கான விளக்கத்தை மத்திய அரசு மாற்றியமைக்க வேண்டும். இந்தியாவில் பிறந்த எவரையும் சிறுபான்மையினராக கருதக்கூடாது. வெளிநாட்டில் பிறந்தவர்களை மட்டுமே சிறுபான்மையினராக கருத வேண்டும். இந்திய முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் சிறுபான்மையினராக கருத வேண்டிய அவசியம் என்ன? இஸ்லாம் மதத்தில் 73 பிரிவுகள் உள்ளன. இந்தியாவில் உள்ள எல்லா பிரிவு முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். மற்ற நாடுகளில் முஸ்லிம் பிரிவினருக்கிடையே மோதல் என்பது சர்வ சாதாரணமாக உள்ளது. ஆனால் இந்தியாவில் அமைதியான முறையில் அவர்கள் வாழ்கிறார்கள்.

இந்திய முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை சிறுபான்மையினராக அடையாளம் காட்டும் இந்திய அரசியல் சட்டத்தில் பல்வேறு குறைகள் உள்ளன. இந்திய அரசியல் சட்டத்தின் தந்தை என கருதப்படும் டாக்டர் அம்பேத்கர் கூட, அரசியல் சாசனம் குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கவில்லை. இந்திய அரசியல் சாசனத்தை தான் சுதந்திரமாக உருவாக்கவில்லை எனவும், எப்படி இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோ, அதற்கேற்ப தான் தயாரித்ததாகவும் ஒரு முறை அம்பேத்கரே தெரிவித்துள்ளார். இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.  இவ்வாறு சுதர்சன் பேசினார்

Make a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

2 Responses to “இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் கிடையாது !”

RSS Feed for Islamic News Comments RSS Feed

ஹிஹிஹிஹி……..நமது உழைப்பு ஆர்.எஸ்.எஸ் இச்சமூகத்திலிருந்து சிறுபானமையினராக்க உதவுவதாக இருக்க வேண்டும் நண்பரே…..

இந்தியாவில் பிறந்த எவரையும் சிறுபான்மையினராக கருதக்கூடாது. வெளிநாட்டில் பிறந்தவர்களை மட்டுமே சிறுபான்மையினராக கருத வேண்டும். இந்திய முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் சிறுபான்மையினராக கருத வேண்டிய அவசியம் என்ன? இஸ்லாம் மதத்தில் 73 பிரிவுகள் உள்ளன. இந்தியாவில் உள்ள எல்லா பிரிவு முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். மற்ற நாடுகளில் முஸ்லிம் பிரிவினருக்கிடையே மோதல் என்பது சர்வ சாதாரணமாக உள்ளது. ஆனால் இந்தியாவில் அமைதியான முறையில் அவர்கள் வாழ்கிறார்கள்.


Where's The Comment Form?

    About

    இஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.

    RSS

    Subscribe Via RSS

    • Subscribe with Bloglines
    • Add your feed to Newsburst from CNET News.com
    • Subscribe in Google Reader
    • Add to My Yahoo!
    • Subscribe in NewsGator Online
    • The latest comments to all posts in RSS

    Meta

Liked it here?
Why not try sites on the blogroll...

%d bloggers like this: