இ யூ மு லீக் ‘பாபர் மசூதி நினைவு ‘ சிறப்பு கருத்தரங்கம்

Posted on 0120432am. Filed under: அரசியல், காவிகள், சட்டம் - நீதி |

 குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML) சார்பில் 30-11-2007 வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் இஷா தொழுகைக்கு பிறகு நடைப்பெற்றது  குவைத், ஃபஹாஹீல் பகுதியில் உள்ள பிஸ்மில்லாஹ் (அல்-ஷாஃபி) ஹோட்டல், சிராஜுல் மில்லத் அரங்கத்தில்  மசூதியும் , சமுதாய அரசியலும்…’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
கருத்தரங்க நிகழ்ச்சிக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் உலமாக்கள் குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மது இப்ராஹீம் மன்பயீ ஹஜ்ரத் அவர்கள் தலைமையேற்க, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் தலைமை நிலைய சொற்பொழிவாளர் மவ்லவீ காரீ ஏ.ஆர். முஹம்மது அலீ ரஷாதி அவர்கள் கிராஅத் (இறைமறை திருக்குர்ஆன் வசனங்கள்) ஓத, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹஜ்ரத் அவர்கள் வரவேற்புரையாற்ற , சமுதாய சேவகர் கவிஞர் ஷம்சுத்தீன் அவர்கள் வாழ்த்துரை வழங்க கருத்தரங்க நிகழ்ச்சி இனிதே துவங்கியது.  

தலைவரின் ‘சமுதாய ஒற்றுமை மற்றும் முஸ்லிம்களின் கடமைகள் ‘ குறித்த தலைமையுரைக்கு பின் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முன்னோடி ஏபிஸி. நஜீர் அவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இதுவரை செய்த சாதனைகள், இனி செய்ய வேண்டிய பணிகள்’ குறித்து கருத்தரங்க தொடக்கவுரையாற்றினார். 

அதைத் தொடர்ந்து…  குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., அவர்கள் ‘ பாபர் மசூதியின் வரலாறு, இடிப்பு , வழக்கு விவரங்கள் மற்றும் தற்போதைய சமுதாய அரசியல் நிலவரங்கள் ‘ குறித்தும்,  

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க த்தின் உலமாக்கள் குழு உறுப்பினர் பேராசிரியர் மவ்லவீ ஏ. அப்துஸ் ஸலாம் தாவூதி அவர்கள் ‘ ஆரிய ஹிந்துத்வ தீவிரவாதிகளின் திட்டங்கள், முஸ்லிம்கள் அதனை எதிர்கொள்ளும் முறைகள் ‘ குறித்தும் ,   சமுதாயக் கவிஞர் – எழுச்சிப் பாவலர் விழுப்புரம் ஷாஜி எம்.ஏ. ,  பி.எட். , அவர்கள் ‘இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த இஸ்லாமியர்கள் , சங்பரிவார்களின் வரலாற்று திரிபுகள் , எதிர்கால சமுதாயத்திற்கு அளிக்க வேண்டிய அறிவுரைகள்’ குறித்தும் சிறந்த முறையில் தங்கள் கருத்துக்களை கருத்தரங்கில் எடுத்துரைத்தனர். 

குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  அமைப்பாளரும் , குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் துணைத் தலைவருமான திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா அவர்கள் ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வரலாற்றுச் சுவடுகள் , கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் வாழ்க்கைப் பக்கங்கள் , தற்போதைய முஸ்லிம் போலி அரசியல்வாதிகளின் ஏமாற்று வித்தைகள் ‘ குறித்து கருத்தரங்க நிறைவுரையாற்றினார்.    
 
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியாவின் மாண்புமிகு குடியரசு தலைவர், மாண்புமிகு பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு அனுப்ப வேண்டிய அவசர கோரிக்கை மனுக்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களிடம் விநியோகிக்கப்பட்டன. 

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் ஹவல்லி கிளை பொறுப்பாளர் ஏ. ஹஸன் முஹம்மது அவர்கள் நன்றி கூற, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் தலைமை நிலைய சொற்பொழிவாளர் மவ்லவீ காரீ ஏ.ஆர். முஹம்மது அலீ ரஷாதி அவர்களின் துஆவுடனும், குவைத், ஃபஹாஹீல் பகுதியிலுள்ள பிஸ்மில்லாஹ் (அல்-ஷாஃபி) ஹோட்டல் நிர்வாகத்தினர் மூலமாக வழங்கப்பட்ட இரவு உணவுடனும் இரவு 10.30 மணிக்கு கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது. 

இந்த பாபர் மசூதி நினைவு சிறப்பு கருத்தரங்கில் குவைத்தின் பல பகுதிகளிலிருந்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கர்கள், ஆர்வலர்கள் , அனுதாபிகள், உலமாக்கள், தொழிலதிபர்கள் , வியாபாரிகள், பணியாளர்கள், பல்வேறு இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க  பொறுப்பாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.                   
 

செய்தி: Dr. K.S. Anwar Batcha

Organizing Team, Kuwait Indian Union Muslim League (KIUML)

Make a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

    About

    இஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.

    RSS

    Subscribe Via RSS

    • Subscribe with Bloglines
    • Add your feed to Newsburst from CNET News.com
    • Subscribe in Google Reader
    • Add to My Yahoo!
    • Subscribe in NewsGator Online
    • The latest comments to all posts in RSS

    Meta

Liked it here?
Why not try sites on the blogroll...

%d bloggers like this: