வேதாளையில் தெருமுனைப் பிரச்சாரம்

Posted on 022556pm. Filed under: ஆன்மீகம் | Tags: , , , , |

தெருமுனைப் பிரச்சாரம் 

இராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் சார்பாக வேதாளை பேருந்து நிலையத்தில் மவ்ளவி ரிபாய் ரஷ்ஷாதி அவர்கள் மறுமையின் சிந்தனை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். பொதுமக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள இடமாதலால் அங்கும் இங்குமாக நின்று அதிகமானவர்கள் கேட்டு பயனடைந்தனர்.; வேதாளை சகோதரர்களுடன், புதுமடம், மரைக்காயர்பட்டிணம், இராமநாதபுரம் சகோதரர்களும் கலந்து கொண்டனர். பெண்கள் வீட்டில் இருந்தபடியே ஒலிபெருக்கி மூலம் கேட்டனர். இறுதியாக கிளை தலைவர் அஹமது கபீர் அவர்கள், ரஷ்ஷாதி அவர்களின் உரையில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரிசோதித்தார்கள். இதில் வென்றவர்களுக்கு பரிசுகளும், கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அனைவருக்கும் ஆறுதல்பரிசாக மார்க்க புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டார்கள். நிகழ்ச்சியை கிளை தலைவர் கபீர் பாயுடன் மற்ற நிர்வாகிகளும் சிறப்பாகச் செய்திருந்தனர்.
மாணவர்கள் கருத்தரங்கம்
இராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைமையகத்தில் மாணவர்களுக்கான கருத்தரங்கம் மாவட்ட தலைவர் எம். அப்துல் ஹமீது தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக மாநில செயளாலர் சகோ. முனீர் ஆ. ளுஉ. சகோ. அப்துல் ஹக்கீம் டீ. நு. மற்றும் மதுரையைத் தலைமையாகக் கொண்ட மாணவர் அணியின் பொருப்பாளார் சகோ. முஹம்மது இல்யாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். சமுதாயத்தில் மாணவர்களின் பங்கு என்ன? உலக சரித்திரத்தில் இதுவரை மாணவர்களால் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? மாணவர்களை எங்கனம் ஒருங்கிணைப்பது? என்பன போன்றவைகளை மாநில செயளாலர் முனீர் அவர்களும் சகோ. அப்துல் ஹக்கீம் அவர்களும் சிறப்பாக கடந்த கால சான்றுகளுடன் எடுத்துரைத்தார்கள். பின் மாணவர்களுடைய கேள்வி பதில் நிகழ்ச்சியில் அவர்களது அனைத்து விதமான ஐயங்களுக்கும் விளக்கமளித்து, இனிவரக்கூடிய காலங்களில் மாணவர்களை ஒருங்கிணைப்பது எப்படி என்பதை விளக்கிக் கூறியபின், மாணவர்களின் கல்வித்தரத்திற்கு ஏற்ப எங்கனம் உயர்கல்வி கற்பது, தற்காலத்திற்கு எவ்வித கல்வி கற்றால் முன்னேற்ற மடைய முடியும் என்பன போன்றவைகளை விளக்கிக் கூறியபின் நிகழ்ச்சி நிறைவுற்றது. மேலும் கல்வி வேலை வாய்ப்பிற்கென்று தனியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வெப்சைட் தொடங்க வேண்டும் என்பதையும் மாணவர்களால் வலியுறுத்திக் கூறப்பட்டது. இதில் மாவட்ட செயளாலர் ஆரிப்கான், மாவட்ட மாணவர் அணி பொருப்பாளர் சகோ. இம்ரான், மாவட்ட துணைச் செயலாளர் சகோ. மாஹீன் ஆகியோர் நிழக்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். பல கல்விக்கூடங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றாலும் அதிகமான மாணவர்கள் பல கிளைகளில் இருந்து கலந்து பயனடைந்தனர்.  

தகவல் : rmdtntj@gmail.com

Advertisements

Make a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

    About

    இஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.

    RSS

    Subscribe Via RSS

    • Subscribe with Bloglines
    • Add your feed to Newsburst from CNET News.com
    • Subscribe in Google Reader
    • Add to My Yahoo!
    • Subscribe in NewsGator Online
    • The latest comments to all posts in RSS

    Meta

Liked it here?
Why not try sites on the blogroll...

%d bloggers like this: